சென்​னை​யில் இன்று 6 வார்​டு​களில்  ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம் | today ungaludan stalin camp in 6 wards at Chennai

1370567
Spread the love

சென்னை: சென்​னை​யில் இன்று 3, 16, 96, 129, 160, 171 ஆகிய 6 வார்​டு​களில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம் நடை​பெற உள்​ளது. திரு​வொற்​றியூர் மண்​டலம், 3-வது வார்​டு, எண்​ணூர், மார்க்​கெட் தெரு, அன்னை சிவ​காமி நகர் 5-வது தெரு​வில் உள்ள சமூகநலக் கூடத்​தி​லும், மணலி மண்​டலம், 16-வது வார்​டு, சடையன்​குப்​பம், அந்​தோணி​யார் ஆலய சமூகநலக் கூடத்​தி​லும், அண்​ணாநகர் மண்​டலம், 96-வது வார்​டு, அயனாவரம், பரசு​ராமேஸ்​வரன் கோவில் தெரு​வில் உள்ள வெற்றி மஹாலிலும் ‘உங்​களு​டன் ஸ்டாலின்’திட்ட முகாம் இன்​று நடை​பெறும்.

மேலும், கோடம்​பாக்​கம் மண்​டலம், 129-வது வார்​டு, சாலிகி​ராமம், கே.கே.​சாலை​யில் உள்ள சுடர்மா திருமண மண்​டபத்​தி​லும், ஆலந்தூர் மண்​டலம், 160-வது வார்​டு, சன்​னி​யாசி சுபே​தார் தெரு​வில் உள்ள எஸ்​.​வி.எஸ்​.ஜெ​யின் சங்​கத்​தி​லும், அடை​யாறு மண்டலம், 171-வது வார்​டு, ராஜா அண்​ணா​மலைபுரம், காம​ராஜ் சாலை, என்​.எஸ்​.​கார்​டன் பகு​தி​யில் புதிய கட்​டிடம் ஆகிய 6 வார்டுகளில் நடை​பெறவுள்​ளது. இந்த முகாம்கள் காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *