சென்னையில் கடும் பனிமூட்டம் : விமானம், ரயில் தாமதம் பயணிகள் அவதி  – Kumudam

Spread the love

சென்னையில் நிலவிய பனிப் பொழிவு காரணமாக புறநகர் ரயில்கள் இன்று காலை தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.

 டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கடுமையான பனிமூட்டம், மோசமான வானிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால், சென்னையில் இருந்து டெல்லி, கொல்கத்தா, வாரணாசி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள், தொடர்ந்து பல மணி நேரம் காலதாமதம், விமானங்கள் ரத்து போன்றவைகள் ஏற்படுகின்றன. 

மேலும், வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் அடர் பனி நிலவியதால், சென்னை விமான நிலையத்தில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், கடந்த சில நாள்களாக படிப்படியாக பனிப் பொழிவு அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகரில் நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக புறநகர் ரயில்கள் 10 முதல் 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.இதனிடையே, தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் அடர் பனிமூட்டம் நிலவுவதால் சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் 7 விமானங்கள் வெள்ளிக்கிழமை காலை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் சென்னையில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, வாரணாசி போன்ற இடங்களுக்கு இயக்கப்படும் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து டெல்லி, வாரணாசி செல்ல வேண்டிய 4 விமானங்கள், டெல்லியில் இருந்து சென்னை வர வேண்டிய 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

டெல்லி, ஐதராபாத், அகமதாபாத், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லக்கூடிய 7 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன புறநகர் ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதம், ரத்து காரணமாக பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *