சென்னையில் கனமழை

dinamani2Fimport2F20212F112F262Foriginal2Fwater 5
Spread the love

சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

வளசரவாக்கம், மதுரவாயல், வானகரம், போரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்கிறது. ஆவடி, பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது.

வெள்ளிக்கிழமை மாலையில் மழை வெளுத்து வாங்குவதால் பணிந்து முடிந்து வீடுகளுக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

மேலும் மழை நீர் ஆங்காங்கே சாலைகளில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக தங்களது வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது வருகின்ற 25-ஆம் தேதி வாக்கில், ஒரிசா – மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Heavy rain is falling in various parts of Chennai and its suburbs.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *