சென்னையில் செப்.21-ல் மநீம பொதுக்குழு கூட்டம் | MNM General Body Meeting on Sep 21 at Chennai

1303227.jpg
Spread the love

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு மற்றும் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியது உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்றாக, பிப்.9-ம் தேதிக்குள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என நிர்வாகக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில், கட்சியின் பொதுக்குழு தொடர்பான அறிவிப்பை மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (ஆக.30) விடுத்த அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் செப்.21-ம் தேதி சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் காலை 9 மணியளவில் நடைபெறுகிறது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *