சென்னையில் நாய் கடி சம்பவத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு | HC orders report to be filed for what steps have been taken to prevent dog bite incidents in Chennai

1373145
Spread the love

சென்னை: சென்னை மாநகரில் கடந்த ஆண்டு மட்​டும் சுமார் 20 ஆயிரம் பேரை நாய்​கள் கடித்​துள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்ட தகவலால் அதிர்ச்​சி​யடைந்த நீதிப​தி​கள், நாய்க்​கடி சம்​பவங்​களை தடுக்க திட்​டம் வகுத்து விரி​வான அறிக்கை தாக்​கல் செய்ய மாநக​ராட்​சிக்கு உத்​தர​விட்​டுள்​ளனர்.

சென்​னை​யில் வீட்​டில் செல்​ல​மாக வளர்க்​கப்​படும் ராட்​வீலர் நாய்​களும், தெரு​நாய்​களும் சிறு​வர், சிறுமியர் மற்​றும் பெண்​களை கடித்​துக் குதறிய சம்​பவங்​களை​யடுத்​து, நாய்​களை கட்​டுப்​படுத்​தக் கோரி கோடம்​பாக்​கத்​தைச் சேர்ந்த வழக்​கறிஞ​ரான ஆர்.எஸ்​. தமிழ்​வேந்​தன் உயர் நீதி​மன்​றத்​தில் பொதுநல வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அதில், ‘தெருக்​களில் வாய்​மூடி அணிவிக்​காமல் அழைத்​துச் செல்​லப்​படும் ராட்​வீலர் போன்ற வளர்ப்பு நாய்​களை​யும், ஆக்​ரோஷமாக சுற்​றித்​திரி​யும் தெரு​நாய்​களை​யும் பிடித்து பொது​மக்​களை பாது​காக்க உரிய நடவடிக்கை எடுக்க மாநக​ராட்​சிக்கு உத்​தர​விட வேண்​டும்’ என கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்​ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி சுந்​தர்​மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசாரணைக்கு வந்​தது. அப்​போது, சென்னை மாநக​ராட்​சி​யின் முதன்மை கால்​நடைத் துறை அதி​காரி​யான ஜெ.க​மால் ஹூசைன் ஆஜராகி அறிக்கை தாக்​கல் செய்​தார்.

அதில், ‘சென்னை மாநக​ராட்சி எல்​லைக்​குள் வீடு​களில் நாய் உள்​ளிட்ட செல்​லப்​பி​ராணி​களை வளர்ப்​பவர்​கள் அதற்​கான உரிமம் பெறு​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. ஆன்​லைனில் இதற்​கான உரிமம் பெறு​வதற்​கான நடை​முறை​கள் எளி​தாக்​கப்​பட்​டுள்​ளது. இந்த நாய்​களால் பொது சுகா​தா​ரத்​துக்கு ஏற்​படும் தீங்​கு​கள், மலம் கழித்​தல், கடித்​தல் போன்ற அனைத்து நிகழ்​வு​களுக்​கும் சம்​பந்​தப்​பட்ட உரிமை​யாளரே பொறுப்​பேற்க வேண்​டும் என்​றும் நிபந்​தனை​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த ஆக.9-ம் தேதி முதல் வெறி​நாய் தடுப்​பூசி போடு​வதற்​கான மெகா திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்டு 200 வார்​டு​களி​லும் 60 நாட்​களுக்​குள் முடிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது’ என தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. விசா​ரணை​யின்​போது, ‘‘சென்​னை​யில் எத்​தனை நாய் கடி சம்​பவங்​கள் நடந்​துள்​ளன’’ என தலைமை நீதிபதி கேள்வி எழுப்​பினர். அதற்கு பதிலளித்த கால்​நடைத்​துறை அதி​காரி, ‘‘உத்​தேச​மாக கடந்த ஆண்டு மட்​டும் 20 ஆயிரம் நாய் கடி சம்​பவங்​கள் நிகழ்ந்து இருக்​கும்’’ என்​றார்.

அதைக் கேட்டு அதிர்ச்​சி​யடைந்த நீதிப​தி​கள், தெரு​நாய்​களை பிடித்து கருத்​தடை செய்து தடுப்​பூசி போட்டு மீண்​டும் அதே பகுதியில் விடு​வதற்கு பதிலாக அவற்றை தனி​யாக காப்​பகம் அமைத்து பராமரிக்​கலாம் என கருத்து தெரி​வித்​தனர். பின்​னர் தெரு​நாய் விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்​ற​மும் விசா​ரித்து வரு​வ​தால், நாய் கடி சம்​பவங்​களைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்​டுள்​ளது என்​பது தொடர்​பாக விரி​வான அறிக்கை தாக்​கல் செய்ய மாநக​ராட்சிக்​கு உத்​தர​விட்​டு, வி​சா​ரணை​யை 3 வாரங்​களுக்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *