சென்னையில் நாளை 15 இடங்களில் குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர் கூட்டம் | Tomorrow Drinking Water Board Grievance Redressal Meeting on Chennai

1372402
Spread the love

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மாதாந்திர குறைதீர் கூட்டம், 15 இடங்களில் நாளை (ஆக.9) நடைபெறுகிறது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில், ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்துக்கான குறை தீர்க்கும் கூட்டம் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குடிநீர் வாரியத்தின் 15 இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. இந்த குறை தீர்க்கும் கூட்டங்கள் வாயிலாக பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பார் வைப் பொறியாளர் தலைமையில் இக்கூட்டம் நடைபெறும்.

எனவே, இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் தொடர்பான பிரச்சினைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவிக்கலாம். மேலும், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் இக்கூட்டத்தில் பங்கேற்று அறிந்து கொள்ளலாம் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *