சென்னை அடுத்த திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் சிறப்புபெற்ற கல்யாண வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா தொடங்கி நடந்து வருகிறது.
வீதி உலா
இதையொட்டி இன்று(22ந்தேதி) காலை கருடசேவை விழா நடந்தது. இதற்காக கருட வாகனத்தில் வரதராஜபெருமாள் வீதி உலா வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சுமார் 15 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கருட வாகனத்தில் வைத்து வரதராஜபெருமாளை வீதி உலா புறப்பட கோவில் வளாகத்தில் சுற்றி வந்தனர்.
சாமிசிலை கீழே சரிந்தது
சிறிது நேரத்தில் பல்லக்கில் இருந்த இடது புற கம்பு திடீரென உடைந்தது. இதானல் நிலை தடுமாறிய பல்லக்கை தூக்கிய பக்தர்கள் கீழே விழுந்தனர். அவர்களோடு பல்லக்கும்,சாமிசிலையும் கீழே சரிந்தது. இதனை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பல்லக்கில் இருந்த சாமி சிலையை மீட்டு பத்திரமாக கோவிலுக்குள் எடுத்து சென்றனர். மேலும் கோவில் நடை சாத்தப்பட்டு பரிகார சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து வேறு கோவிலில் இருந்து பல்லக்கு கம்பு வரவழைக்கப்பட்டு மீண்டும் கருட வாகனத்தில் வரதராஜபெருமாள் .
லேசான காயம்
வீதி உலா விமரிசையாக நடைபெற்றது. சாமிசிலையுடன் பல்லக்கு சரிந்ததில் அருகில் இருந்த பக்தர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சாமி ஊர்வலத்தில் பல்லக்குடன் சிலை சரிந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.