சென்னையில் வரும் பிப். 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரம்மஸ்தான மஹோத்சவத்தில் பங்கேற்பதற்காக மாதா அமிர்தானந்தமயி வருகிறார்.
மாதா அமிர்தானந்தமயி மடத்தின் 35-வது பிரம்மஸ்தான ஆண்டு விழா சென்னையில் பிப்ரவரி 17, 18 (திங்கள், செவ்வாய்) தேதிகளில் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
விருகம்பாக்கத்தில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்தில் பகல் 11 மணியளவில் தொடங்கும் நிகழ்ச்சியில் மாதா அமிர்தானந்தமயி கலந்துகொள்கிறார்.
அவரது வழிகாட்டுதலின்படி தியானம், பஜனை மற்றும் உலக அமைதிக்கான பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து மாதா அமிர்தானந்தமயி தரிசனம் நடைபெறும்.
இரண்டு நாள் நிகழ்ச்சியான இவ்விழாவின் ஒரு பகுதியாக, பிரம்மஸ்தானம் திருக்கோயிலில் காலை, மாலையில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இலவச உணவளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.