சென்னையில் மலர்க் கண்காட்சி: முதல்வர் திறந்து வைக்கிறார்!

Dinamani2f2024 12 312fchotcgmm2fdinamani2024 12 251ms0k0tfdglflowers32512chn662.avif.avif
Spread the love

சென்னையில் 4வது ஆண்டாக நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள்(ஜன. 2) தொடக்கி வைக்கிறார்.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டும் நடத்தப்பட்டு வந்த மலா்க் கண்காட்சி, முதல் முறையாக கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது.

சென்னை செம்மொழி பூங்காவில் தமிழ்நாடு தோட்டக் கலைத் துறை சாா்பில், கடந்த 3 ஆண்டுகளாக மலர்க் கண்காட்சி தொடா்ந்து நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டும் நடைபெறுகிறது.

இதையும் படிக்க: 2024 – அதிகரித்த ரயில் விபத்துகள்!

இதையொட்டி, சென்னை கண்காட்சிக்குத் தேவையான மலா்ச் செடிகளை உற்பத்தி செய்யும் பணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்தக் கண்காட்சிக்கு நீலகிரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மலா்ச் செடிகள் உற்பத்தி செய்து, அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 2025-ஆம் ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி, ஜனவரி 2 ஆம் தேதி முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை இந்த மலர்க் கண்காட்சி நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் மக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ. 150, சிறியவர்களுக்கு ரூ. 75-ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

30 லட்சம் மலர்த் தொட்டிகளுடன் மலர்கள் கொண்டு வரப்பட்டு மலர்க் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *