சென்னையில் இன்று(டிச. 24) காலை 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவையில் கால இடைவெளி அதிகமாக விடப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மெட்ரோ ரயில்கள் மீண்டும் வழக்கம் போலஇயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை விமான நிலையம் – விம்கோ நகர் பணிமனை இடையிலான மெட்ரோ நீல வழித்தடத்தில் பராமரிப்புப் பனிகள் நிறைவடைந்துள்ளதால் காலை 8.50 மணிக்குப்பின் மெட்ரோ ரயில் சேவை சீரானதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: தமிழுக்குத் தனிப் பல்கலைக்கழகம் கண்ட எம்.ஜி.ஆர்.
இன்று காலை மெட்ரோ ரயில் சேவையில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறால் சென்னை விமான நிலையம் – விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நீல வழித்தடத்தில் 18 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்ததால் மெட்ரோவை பயன்படுத்தி காலையில் பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
இதையும் படிக்க: சென்னை: மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!