சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்கள் கைது: காவல் துறை நடவடிக்கை | chennai conservancy workers protest opposed privatization Police arrested

1372982
Spread the love

சென்னை: தலைநகர் சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து புதன்கிழமை இரவு இந்த கைது நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டனர்.

சென்னை மாநக​ராட்சி மண்​டலம் 5, 6 பகு​தி​களுக்​கான தூய்​மைப் பணி தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதை எதிர்த்​தும், பணி நிரந்​தரம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தியும்​ இரண்டு மண்டல தூய்​மைப் பணி​யாளர்​களில் என்​யூஎல்​எம் பிரிவைச் சேர்ந்​தவர்​கள் கடந்த 13 நாட்​களாக ரிப்​பன் மாளிகை முன்பு போராட்​டம் மேற்கொண்டனர். தூய்​மைப் பணி​யாளர்​களு​டன் அரசு தரப்பு மேற்கொண்ட பல சுற்​று பேச்​சு​வார்த்​தை​ தோல்​வி​யில் முடிந்த நிலை​யில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறித்து போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவை அடுத்து போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறை புதன்கிழமை மாலை அறிவுறுத்தியது.

இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் தங்களது போராட்டத்தை அங்கு தொடர்ந்தனர். சுதந்திர தினம் நெருங்குகின்ற சூழலில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் தங்களது கையில் தேசிய கொடியை ஏந்தி இருந்தனர். இந்த சூழலில் நீதிமன்ற உத்தரவின் பேரில் புதன்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

கைது நடவடிக்கைக்கு ஆளான தூய்மை பணியாளர்கள் அரசு பேருந்து மூலம் அழைத்து செல்லப்பட்டனர். போராட்ட களத்தில் இருந்து விலகி செல்ல மறுத்தவர்களை குண்டுக்கட்டாக போலீஸார் தூக்கி சென்றனர். பெண் தூய்மை பணியாளர்களை பெண் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரிப்பன் மாளிகை பகுதி முழுவதும் போலீஸார் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த கைது நடவடிக்கையின் போது அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *