தெலுங்கு மக்கள் குறித்த அவதூறாக பேசிய வழக்கில் ஹைதராபாத்தில் கைதான நடிகை கஸ்தூரியை காவல்துறை சென்னை அழைத்து வந்தது.
இந்த வழக்கில் கச்சிபௌலியில் தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை நேற்று கைது செய்தது. இதைத்தொடர்ந்து சாலை மார்க்கமாக நடிகை கஸ்தூரி இன்று காலை சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் போது, தெலுங்கு பேசும் பெண்கள், திராவிடா்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக அவா் மீது மதுரை நாயுடு மகாஜன சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருநகா் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.