சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் 54-ஆவது தலைமை நீதிபதியாக மநிந்திரா மோகன் ஸ்ரீவாஸ்தவா பதவியேற்றார். அவருக்கு தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர். என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஆளுநர் மாளிகையில் இன்று(ஜூலை 21) நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் என். முருகானந்தம் முன்னிலையில் எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் இந்நிகழ்ச்சியில் ஏற்கெனவே பங்கேற்பதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவருக்கு திடீரென உடல்நலம் குன்றியதால் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
இதையும் படிக்க: முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்