சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் | Change in suburban electric train service

1340350.jpg
Spread the love

சென்னை: சிங்கப்பெருமாள்கோவில் – செங்கல்பட்டு இடையே பொறியியல் பணி காரணமாக, புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில், சிங்கபெருமாள்கோவில் – செங்கல்பட்டு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு இன்று (நவ.20) முதல் 23-ம் தேதி வரை முற்பகல் 11.40, நண்பகல் 12.20, 12.40, மதியம் 1.45, பிற்பகல் 2.15, இரவு 9.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள்கோவில் – செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

இதே நாட்களில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு மதியம் 1.45, பிற்பகல் 2.20, 3.05, மாலை 4.05, 4.35, இரவு 11 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் செங்கல்பட்டு – சிங்கப்பெருமாள்கோவில் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. இந்த தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *