சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே கூடுதல் பேருந்துகள்

Dinamani2fimport2f20232f32f82foriginal2f0311c2bus2 0203chn 3.jpg
Spread the love

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையே நாளை (டிசம்பர் 8) முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் 8.12.2024 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மறு அறிவிப்பு வரும் வரை கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விடாமுயற்சி டப்பிங்கை முடித்த அஜித்!

இந்த அறிவிப்பினை தொடர்ந்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், வரும் 8.12.2024 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் நலன் கருதி வழக்கமாக மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக தாம்பரம் முதல் பிராட்வே வரை கூடுதலாக 10 பேருந்துகளும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை 05 பேருந்துகளும், கூடுவாஞ்சேரி முதல் தி.நகர் வரை 05 பேருந்துகள் என மொத்தம் 20 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து, இப்பேருந்துகளின் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *