தீபாவளியை முன்னிட்டு சென்னை-கன்னியாகுமரி, ஈரோடு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை(அக்.27) 11.25 மணிக்கும், மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து நாளை மறுநாள்(அக்.28) பிற்பகல் 2.45 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதேபோல் ஈரோடு-சென்னை சென்ட்ரல் இடையே அக்.30, 31, நவ.3 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
மதுரையில் மழைநீரை வெளியேற்ற 3 நாட்கள் ஆகும்: அமைச்சர் மூர்த்தி
முன்பதிவில்லாத இந்த விரைவு ரயில் ஈரோட்டில் இருந்து காலை 4.55 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினமே காலை 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.
மறுமார்க்கமாக இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது.
தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் கூடுதல் நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.