சென்னையில் போக்குவரத்துப் பேருந்துகளின் பயன்பாடு குறைந்திருப்பதாக உலக வங்கி மற்றும் சென்னை ஒருங்கிணைந்த மாநகரப் போக்குவரத்து ஆணையம் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
சென்னையில் 15 ஆண்டுகளில் போக்குவரத்து பயன்பாடு குறைந்திருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மாநகரப் பேருந்துகளின் பயன்பாடு, 2008-ல் 26 விழுக்காடு என்று இருந்தது; ஆனால், 2023-ல் 18 விழுக்காடாகக் குறைந்தது.
மேலும், இருசக்கர வாகனங்களின் பயன்பாடு, 25 விழுக்காட்டிலிருந்து 37.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஆட்டோ மற்றும் வாடகை கார்களின் பயன்பாடும் 4 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடாக அதிகரித்துள்ளது.