இந்நிலையில், இன்று நேரமில்லா நேரத்தில் பேச எழுந்த உமா ஆனந்தன் ஆரம்பத்திலேயே திமுக-வை ஏகத்துக்கும் புகழ்ந்தார். “மாமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று நான்காண்டுகளில் நான் முன்வைத்த 80% கோரிக்கைகளை மேயரும் துணை மேயரும் நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள். பாஜக உறுப்பினர் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடாது என்றில்லாமல் நல்ல எண்ணத்தோடு பணிகளை முடித்துக் கொடுத்த திமுக அரசுக்கு நன்றி. இந்த மாமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்குள் 100% கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்’ என்றார்.

பாஜக உறுப்பினரே திமுக-வை புகழ்ந்ததால் அவையில் பெருவாரியாக இருக்கும் திமுக உறுப்பினர்கள் கரகோஷம் எழுப்பினர். ‘இதுதான் திராவிட மாடல் அரசு’ என துணை மேயர் மகேஷ் குமார் பெருமிதம் பேசினார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து பேசிய 99 வார்டு திமுக கவுன்சிலர் பரிதி இளம் சுருதி, ‘உமா ஆனந்தன் அவர்கள் நம்மைப் பாராட்டி பேசினார். சில நிமிடங்களுக்கு முன் ஒரு கேமராமேனை அழைத்து அவர் மைக்கில் பேசுவது போல போஸ் கொடுத்து ஒரு போட்டோ எடுத்ததைப் பார்த்தேன். அதுதான் பாஜக. பாஜக செய்வதெல்லாம் ரீல். திராவிட மாடல் தான் ரியல். நீங்கள் டூப். நாங்கள்தான் டாப்.

எங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நல்லது செய்வோம் என தலைவர் சொன்னார். அதை செய்தும் காட்டியிருக்கிறார்’ என உமா ஆனந்தை கலாய்த்தார். உடனே துணை மேயர் மகேஷ் குமார், ‘ஏம்ப்பா…அவங்கதான் நம்மை பாராட்டுறாங்களே, அப்பவும் விடமாட்டீங்களா?’ என கமெண்ட் அடித்தார்.
வழக்கத்துக்கு மாறாக உமா ஆனந்த் ஏகத்துக்கும் புகழ்ந்து பேசியதை பார்த்த திமுகக்காரர்களே, ‘எலெக்சன் நேரமாக இருப்பதால் கட்சி தாவ நினைக்கிறாரோ..’ என கிசுகிசுத்துக் கொண்டனர்.