சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்குப்பின் போக்குவரத்து சீரானது!

Dinamani2f2024 12 022fxks81lmv2fpti12022024000314a.jpg
Spread the love

ஃபென்ஜால் புயலால் பெய்துள்ள கனமழையால் விழுப்புரம், திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட வட தமிழகத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

இந்த நிலையில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 8 மணி நேரத்திற்குப்பின் போக்குவரத்து சீராகியுள்ளது.

முன்னதாக, சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சித்தனி அருகே சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு வெள்ள நீர் சூழந்ததால், இன்று காலைமுதல் சித்தனி அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.

பேருந்துகள், கனரக வாகனங்கள், கார்கள் என அனைத்து அந்தந்த இடங்களிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. பல கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் வரிசையில் நிற்பதால் மக்கள் செய்வதறியாது தவித்து வந்தனர்.

இந்த நிலையில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரத்திலிருந்து திருச்சியை நோக்கி செல்லும் வழித்தடத்தில், சாலையில் ஒருபுறம் தண்ணீர் வடிந்துள்ளதால், அந்த மார்க்கத்தில் மட்டும் வாகனங்கள் சென்று வர அனுமதிக்கப்படுகின்றன. இதனால் அரசூர் அருகே சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலையில் ஒருபுறத்தில் மட்டும், இருமார்க்கங்களிலும் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக விக்கிரவாண்டி – முண்டியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் வெள்ளநீர் அபாயகக் கட்டத்தில் செல்வதால் பல்வேறு ரயில்களின் சேவையை ரயில்வே துறை திங்கள்கிழமை ரத்து செய்தது. ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *