சென்னை: தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மையைப் பாராட்டிய சௌபாக்கியா கிச்சன் அப்லையன்ஸ்

Spread the love

சென்னையைச் சேர்ந்த 48 வயதான தூய்மைப்பணியாளர் எஸ். பத்மா பணியின் போது கண்டெடுத்த ₹ 45 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருப்பி அளித்து பரவலான பாராட்டைப் பெற்றுள்ளார்.

ஜனவரி 11ஆம் தேதி வண்டிக்காரன் சாலையில் குப்பை சேகரித்துக் கொண்டிருந்த போது பத்மா 45 சவரன் தங்க ஆபரணங்கள் அடங்கிய பையைக் கண்டெடுத்தார். தயக்கமின்றி உடனடியாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பத்மாவின் நேர்மை பாராட்டிய சௌபாக்ய வரதராஜன்

பத்மாவின் நேர்மை பாராட்டிய சௌபாக்ய வரதராஜன்

காவல்துறை விசாரணையில் வியாபாரி ரமேஷுக்குச் சொந்தமான நகைகள் எனத் தெரியவந்து, உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.

நங்கநல்லூரைய்ச் சேர்ந்த பத்மாவின் நேர்மையான செயலுக்கு சென்னை காவல்துறை மாநகராட்சி அதிகாரிகள், முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோர் அவரின் நேர்மையை பாராட்டி ₹ 1 லட்சம் பரிசு தொகை வழங்கினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *