சென்னை தொகுதிகளுக்கு மல்லுக்கட்டும் கூட்டணிக் கட்சிகள்… கறார் காட்டும் திமுக! | Chennai Constituencies Turn Battleground for Alliance Parties… DMK Takes a Firm Stand!

Spread the love

அதேசமயம் மதுரவாயல் தொகுதியை பெற தி.மு.க-வுள்ளேயே இருவர் முட்டி மோதுகிறார்கள். சிட்டிங் எம்.எல்.ஏ காரப்பாக்கம் கணபதி மீண்டும் களமிறங்க விரும்பும் நிலையில், தி.மு.க-வின் ஐடி விங் மாநில நிர்வாகி பத்மபிரியாவும் சீட் எதிர்பார்க்கிறார். மக்கள் நீதி மய்யம் தொகுதியை பெற தீவிரம் காட்டினாலும் தி.மு.க புள்ளிகளுக்குதான் சீட் என்பதே தற்போதைய நிலவரம்.

திமுக பத்மபிரியா

திமுக பத்மபிரியா

அதேபோல், வேளச்சேரி தொகுதிக்கும் தி.மு.க கூட்டணியில் கடும் போட்டி நிலவுகிறது. வி.சி.க வசமுள்ள திருப்போரூர் தொகுதியை தி.மு.க திரும்பப் பெற்றுக் கொண்டால் வேளச்சேரியை கேட்கலாம். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ் பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோரின் ஒருவர் சென்னையில் களமிறங்க கட்சித் தலைமையிடம் விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால், தி.மு.க-வில் துணை மேயர் மகேஷ் குமார், ராஜ்ய சபா எம்.பி கனிமொழி சோமு ஆகியோர் மல்லுக்கட்டி வருகிறார்கள். வேளச்சேரி சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுக்கு கல்தா என்பதில் மட்டும் சந்தேகமில்லை என்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *