சென்னை – நாகர்கோவிலுக்கு வாரத்தில் 4 நாட்கள் ‘வந்தே பாரத்’ சிறப்பு ரயில் சேவை | Vande Bharat service to Chennai – Nagercoil 4 days a week

1273873.jpg
Spread the love

சென்னை: ரயில் பயணிகள் வசதிக்கென சென்னை – நாகர்கோவில் இடையே வாரம் நான்கு முறை சேவையாக ‘வந்தே பாரத்’ சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, சென்னை – நாகர்கோவில் ‘வந்தே பாரத்’ சிறப்பு ரயில் (06067) சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 11, 12, 13, 14, 18, 19, 20, 21 ஆகிய வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் நாகர்கோவில் – சென்னை வந்தே பாரத் சிறப்பு ரயில் (06068) நாகர்கோவிலில் இருந்து குறிப்பிடப்பட்ட அதே வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

இந்த சிறப்பு ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை செல்லும் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படுகிறது.

மறு மார்க்கத்தில் சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் மதுரைக்கு காலை 10.37 மணிக்கு வந்து சேருகிறது. இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில்களுக்கான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *