சென்னை: பயணச்சீட்டு கருவியில் யுபிஐ பயன்பாட்டை அதிகரிக்க நடத்துநர்களுக்கு பயிற்சி | Training for operators to increase UPI usage in ticketing machine

1340787.jpg
Spread the love

சென்னை: பயணச்சீட்டு கருவியில் யுபிஐ பயன்பாட்டை அதிகரிப்பது தொடர்பாக மாநகர பேருந்து நடத்துநர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்.28-ம் தேதி முதல் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மின்னணு பயணச்சீட்டு வழங்கும் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது கருவி வாயிலாக

மட்டுமே பயணசீட்டு வழங்கப்பட்டு வருகிறது. எனினும், மின்னணு பயணச்சீட்டு வழங்கும் கருவியில் யுபிஐ மற்றும் டெபிட், கிரெடிட் கார்டு பரிவர்த்தனை குறைவாக இருக்கிறது.

இதை அதிகரிக்கும் நோக்கில் கடந்த நேற்றும் இன்றும் (நவ.22, 23) 20 முக்கிய பேருந்து நிலையங்களில் மாநகர போக்குவரத்து அதிகாரிகள் நடத்துநர்களுக்கு பயிற்சி அளித்தனர். அதன்படி, 1,150 நடத்துநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், மூன்று வாரங்களுக்கு ஒவ்வொரு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், 20 முக்கிய பேருந்து நிலையங்களில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது, என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *