சென்னை: பாலியல் புகாரில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல்பாபு கைது!| Chennai Anna University professor Gnanavel Babu arrested in a sexual harassment complaint

Spread the love

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார்.

அதில், பேராசிரியர் ஞானவேல் பாபு என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், செல்போனில் இரட்டை அர்த்தத்தில் பேசி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் மாணவியின் புகாரை விசாரிக்கும்படி மயிலாப்பூர் துணை கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மயிலாப்பூர் துணை கமிஷனர் தலைமையில் அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் போலீஸார் விசாரணை நடத்தினர்.

பாலியல் குற்றச்சாட்டு
மாதிரிப் படம்

பாலியல் குற்றச்சாட்டு
மாதிரிப் படம்

புகாரளித்த மாணவியிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர், பேராசிரியர் ஞானவேல் பாபு, கொடுத்த பாலியல் டார்ச்சர் தொடர்பான ஆவணங்களை போலீஸாரிடம் கொடுத்தார்.

இதையடுத்து சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியோடு மாணவி கொடுத்த ஆதாரங்களை போலீஸார் ஆய்வுக்குட்படுத்தினர். அதோடு குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் ஞானவேல் பாபுவிடம் விசாரணை நடத்த போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தனர் .

இதற்கிடையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் ஞானவேல் பாபுவை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்திருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *