சென்னை புத்தகக் கண்காட்சி : இந்த நூல்களை மிஸ் பண்ணிடாதீங்க! | 49th Chennai Book Fair… Don’t Miss These 5 Books!

Spread the love

சங்காரம் – இரா சரவணன்

ஜூனியர் விகடனில் இயக்குநர் இரா.சரவணன் எழுதி வெளியான பரபர நாவல். வாழ்வின் அத்தனை மனிதர்களையும் கதாபாத்திரங்களாக்கி, எளிய வாழ்வையும், அறத்தையும், பெருந்தன்மையையும் பந்திவைத்திருக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கும்.

“இந்த உலகில், எல்லோருக்கும் வாழ வாய்ப்பிருக்கிறது. ஒருவனைக் கொன்று, ஒருவன் வாழவேண்டிய இக்கட்டு உண்மையில் இல்லை. ஆனாலும், ஒவ்வொரு நாளும் எக்கச்சக்க கொலைச் செய்திகள்… காதல், சாதி, அரசியல், நிலம் எனக் காரணங்கள் மாறுகின்றனவே தவிர, கொலைகள் குறையவே இல்லை. சல்லி வேர்களைப்போல தமிழகம் முழுக்க வெட்டுகிற ஆட்கள் விரவிக்கிடக்கிறார்கள். துளி ரத்தம் பார்த்தாலும் மயங்கி விழுகிற நான், அரிவாளும் கத்தியுமாய் அலைகிற இந்தக் கூட்டத்தைப் பற்றி ஆராய்ந்து ‘சங்காரம்’ எழுதக் காரணம், பிறர் உயிர்மீதான பேரக்கறைதான்” என்று இந்தக் கதை குறித்துப் பேசும் சரவணனின் வாக்குமூலம் எத்தனை உண்மை என்பதை இந்த நூலை வாசித்து முடிக்கும் ஒவ்வொரு வாசகரும் உணரமுடியும். விறுவிறுப்பான வாசிப்பை விரும்புபவர்கள் கட்டாயம் வாங்க வேண்டிய நூல் இது.

பக்கங்கள் 280

விலை: ரூ.550

3. அல்கெமி செய்யும் அற்புதம் – குரு மித்ரேஷிவா

அல்கெமி – மாற்றத்தை ஏற்படுத்தும் வாழ்வியல். இது புரிந்துகொள்ளப்பட வேண்டுயது அல்ல. வாழ்ந்துணர வேண்டியது. குரு மித்ரேஷிவா அல்கெமி என்னும் இந்த அற்புத வாழ்வியலை போதித்துவருபவர். இது குறித்து இன்னும் அறியாதவர்களுக்கு வழிகாட்டுகிறது இந்த நூல். அல்கெமி என்றால் என்ன? அதைப் பின்பற்றினால் மனதிலும் வாழ்விலும் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதை விளக்குகிறது. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோதே பலரின் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்கிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.

பக்கங்கள் 216 – விலை 235

அல்கெமி செய்யும் அற்புதம்

அல்கெமி செய்யும் அற்புதம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *