கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு வாசகர்களும் குறிப்பாக இளைஞர்களும் இந்த ஆண்டு அதிகம் வருகை புரிந்தார்கள் எனவும் ஜெயமோகனின் அறம் மற்றும் லதாவின் “கழிவறை இருக்கை’ புத்தகங்கள் எப்போதும் போல இந்த ஆண்டும் அமோக விற்பனை ஆகி உள்ளன என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

பனுவல் புத்தக நிலையத்தில் இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் அதிக விற்பனையான ஐந்து புத்தகங்கள்,
1. எழுத்தாளர் லதா எழுதிய கழிவறை இருக்கை,
2. க்ரிஷ் பாலாவின் ‘மெல்ல செத்து மீண்டும் வா’ என்ற கவிதை தொகுப்பு.
3. ஃபிரான்ஸ் காஃப்கா எழுதிய உருமாற்றம் என்ற உலகப் புகழ்பெற்ற குறுநாவல்.
4. ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேவின் புகழ்பெற்ற நாவல் சித்தார்த்தன்,
5. லியோ டால்ஸ்டாயின் ‘இரண்டு கிழவர்கள்’.
வருடா வருடம் எங்கள் பதிப்பகத்தில் பலதரப்பட்ட வாசகர்களின் வரவேற்புடன் புத்தக விற்பனை சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. எப்போதும் போல இந்த வருடமும் ஜெயமோகன், பெருமாள் முருகன் ஆகியோரின் புத்தகங்கள் நன்கு விற்பனையாகியுள்ளன.

30க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இந்த அரங்கில் வெளியிடப்பட்டதாகவும் விற்பனையாளர் நம்மிடம் கூறினார்.
காலச்சுவடு பதிப்பகத்தில் இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் அதிகம் விற்பனையான முதல் ஐந்து புத்தகங்கள்
1. புக்கர் பரிசு பெற்ற பானு முஸ்தாக்கின் ‘ஒரு முறை பெண்ணாகி வா கடவுளே’ புத்தகம். சகாதேவன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட நூல்.
2. தி. ஜானகிராமனின் கவிதை தொகுப்பான ரசிகரும் ரசிகையும் என்ற புத்தகம்
3. இசைப்பட வாழ்தல்
எழுத்தாளர் கிருபாஜி அவர்களால் எழுதப்பட்ட தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகம்.
4. டச்சு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட உன் கதை, என் கதை.
5. சீன எழுத்தாளர் சூ.டிஷானின் மெட்ராஸ் வணிகரின் சீன மனைவி என்ற தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகம்.