இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது:
“புயல் சின்னம் மீண்டும் வலுவடையவுள்ளது. புயலாக அறிவிப்பதற்கு 35 க்நாட்ஸ் வரை ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் எட்ட வேண்டிய நிலையில், 30 க்நாட்ஸை நெருங்கியுள்ளது. 40 முதல் 45 க்நாட்ஸ் வரை வலுவடைய வாய்ப்புள்ளது.
தீவிர மேகக் கூட்டங்கள் உருவாக்கக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் மரக்காணம் பகுதிகளில் இன்று பகலுக்கு மேல் மாலை, இரவு எனப் படிப்படியாக மழையின் தீவிரத்தன்மை அதிகரிக்கும்.
இன்றும் நாளையும் மிக கனமழை முதல் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளை(நவ.30) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கண்காணிப்பு தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.