சென்னை, புறநகர் அரசு மருத்துவமனைகளுக்குள் புகுந்த மழைநீர்: நோயாளிகள் கடும் அவதி | Rain Water Enters Govt Hospitals: Mothers, Children, Patients Suffer in chennai

1341721.jpg
Spread the love

சென்னை: சென்னை, புறநகர் அரசு மருத்துவமனைகளில் மழைநீர் உள்ளே புகுந்ததால் பிரசவித்த தாய்மார்கள், குழந்தைகள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மழை நீர் தேங்குவதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழை யால், சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தரை தளத்தில் உள்ள புறநோயாளி பிரிவில் மழைநீர் உள்ளே புகுந்தது.

மாற்று வார்டு ஒதுக்கீடு: அதேபோல், சுக பிரசவத்துக்கு பிந்தைய வார்டுகளிலும் மழைநீர் புகுந்ததால், பச்சிளங் குழந்தைகளுடன் இருந்த தாய்மார்கள் அவதிக் குள்ளாகினர். இதையடுத்து, அவர்களுக்கு உடனடியாக மாற்று வார்டு ஒதுக்கப்பட்டது. அதேபோல், அருகேயுள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைகளிலும் மழைநீர் தேங்கியது. இதனால், குழந்தைகளுடன் சிகிச்சைக்கு வரும் பெற்றோர் சிரமத்துக்குள்ளாகினர். மழைநீரை அகற்றுவதற்கு உரிய பணியாளர்கள் இல்லை என்று மருத்துவர்கள், செவிலியர்கள் புகார் அளித்தனர்.

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனை. அருகில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.

தாம்பரம் ஜிலஸ் சாலையில் தேங்கியுள்ள மழை நீர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் புகாமல் இருப்பதற்காக வாயியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தரை தளம் முழுவதும் மழை நீர் சூழ்ந்ததால், அங்கிருந்த நோயாளிகள் முதல் தளத்துக்கு மாற்றப்பட்டனர். முழங்கால் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மருத்துவமனைக்கு உள்ளே செல்லவும், அங்கிருந்து வெளியில் வரவும் முடியாமல் பொதுமக்கள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் புகுந்த மழைநீர்.

ஜிஎஸ்டி சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் மருத்துவமனை வளாகத்துக்குள் வராமல் தடுக்க, வாயில் முன்பு மணல் மூட்டைகளை காவல் துறையினர் வைத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *