"சென்னை போய் ஏமாறப்போறன்னு அப்பா சொன்னாரு; நானும் கென் ரூம்குள்ள நுழைஞ்சதும்..!' – சின்னா தமிழா

Spread the love

கென் கருணாஸ் இயக்கி, நடித்த ‘யூத்’ திரைப்படத்திற்கான சக்சஸ் மீட் சென்னையில் நடந்துள்ளது.

இந்தத் திரைப்படத்தில் நடித்த சின்ன தமிழா யூத் திரைப்படம் குறித்து பேசியதாவது…

“படத்துல நடிக்கணும்ங்கறது சின்ன வயசுல இருந்து எனக்குக் கனவு. ஆனா, நிறைய பேர் என்னை நம்பல.

‘இங்க இருக்க நிறைய பேருக்கே சினிமால வாய்ப்பு இல்லை. லண்டன்ல பிறந்த உனக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்’னு நிறைய கேள்விகள் இருந்துச்சு.

 'யூத்' படம்
‘யூத்’ படம்

அப்பதான் நான் ‘சின்னா தமிழா’ன்னு ஒரு இன்ஸ்டாகிராம் பேஜை சான்ஸ் கிடைக்கிற வரை டிக்டாக், சோசியல் மீடியா மூலமா ஏதாவது பண்ணி நம்ம திறமையை ப்ரூஃப் பண்ணுவோம்’னு ஆரம்பிச்சேன்.

அந்த நேரத்துலதான் கென் எனக்கு இன்ஸ்டாகிராம்ல மெசேஜ் பண்ணார். ‘ப்ரோ, நீங்க சென்னைக்கு வரும்போது நம்ம மீட் பண்ணலாம். என்கிட்ட ஒரு கதை இருக்கு, அதுல ஒரு கேரக்டர் இருக்கு. இன்ஸ்டால என்ன பண்றீங்களோ அதையே இங்க பண்ணுங்க’ன்னு சொல்லி எனக்கு ஒரு வாய்ப்பு தந்தார்

கென்னுக்கும் சினிமா புதுசு… எனக்கும் புதுசு. ஆனா ஒவ்வொரு மாசமும் எனக்கு போன் பண்ணி அப்டேட் சொல்லுவான். ‘இந்த ஆபீஸ்க்குப் போனேன், அவங்க இப்படிச் சொன்னாங்க’ன்னு சொல்லுவான். அவனையே ரிஜெக்ட் பண்ணும்போது நம்மளை எப்படி ஏத்துப்பாங்கன்னு நான் அப்போ யோசிச்சிருக்கேன்

கடைசியா ஒருநாள் போன் பண்ணி, ‘ஆகஸ்ட் 25-ஆம் தேதி நீ சென்னைக்கு வரப்போற, நடிக்கப்போற’ன்னு சொன்னான். நான் சென்னைக்கு வந்து ஒரு ரூம்க்குள்ள நுழைஞ்சப்போ, அங்க ஒரு 10 பேர் படுத்துருந்தாங்க.

சின்னா தமிழா
சின்னா தமிழா

எங்க அப்பா அப்பவே சொன்னாரு, ‘நீ அங்க போய் ஏமாறப்போற’ன்னு. ஆனா எனக்கு அந்த டீம் மேல நம்பிக்கை இருந்தது.

அந்த ஏழு மாசம் கஷ்டமா இருக்கும்னு நினைச்சேன், ஆனா அங்க இருந்தது முழுசும் ‘கென் அண்ட் கேங்’ தான். அவங்கதான் இன்னைக்கு இந்தப் படத்தை உருவாக்கி இருக்காங்க.

சக்சஸ் ஆகுறதுக்கு பேக் கிரவுண்ட் தேவையில்லை. பேஷன் இருந்தா கண்டிப்பா ஜெயிக்கலாம். என்னை இந்த கேங்ல சேர்த்துக்கிட்ட கென்னுக்கு ரொம்ப நன்றி”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *