தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மே 17 இயக்கத்தினர் நடத்தி வருகின்றனர். கடந்த 12-ம் தேதி, அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில், சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் போராட்டம் நடந்தது.
அதில் கலந்துகொண்ட சிவா திலீபன் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளை அழித்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்த நேரத்தில், அங்கே வந்த ரயில் ஒன்றின் மீது, “தமிழ் வாழ்க’ என்று முழங்கிப் பாய்ந்திருக்கிறார்.
இதில் காயமடைந்த அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல், அவர் இறந்துவிட்டார்.

“இனி ஒரு உயிரும் போக வேண்டாம்!
இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் திரு. சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது.
மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்!