சென்னை மண்டலத்தில் இந்தாண்டு இறுதிக்குள் 50 கோயில்களில் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல் | Minister Sekarbabu says kumbabhishekam to be done in 50 temples in Chennai region by the end of this year

1378285
Spread the love

சென்னை: இந்து சமய அறநிலை​யத்​துறை சென்னை மண்​டலத்தை சேர்ந்த இணை ஆணை​யர், துணை ஆணை​யர், செயல் அலுவலர்​களின் ஆய்​வுக் கூட்​டம் அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு தலை​மை​யில், நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள ஆணை​யர் அலு​வல​கத்​தில் நேற்று நடந்​தது.

இந்த கூட்​டத்​தில் அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு பேசி​ய​தாவது: முன் எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்து சமய அறநிலை​யத்​துறைக்கு இது​வரை ரூ.1,187.83 கோடியை முதல்​வர் ஸ்டா​லின், அரசு நிதி​யாக வழங்​கி​யுள்​ளார். இந்த துறை தொடங்​கப்​பட்ட நாள்​முதல் எந்த ஆட்சி காலத்​தி​லும் இல்​லாத வகை​யில், கடந்த நான்​கரை ஆண்​டு​களில் 3,707 கோயில்​களுக்கு கும்​பாபிஷேகம் நடத்​தப்​பட்டு வரலாற்று சாதனை படைக்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை மண்​டலங்​களில் மட்​டும் ஓட்​டேரி செல்​லப்​பிள்​ளை​யார் கோயில், வில்​லி​வாக்​கம் அகஸ்தீஸ்​வரர் கோயில், கொடுங்​கையூர் பவானி​யம்​மன் கோயில், கொண்​டிதோப்பு காசி விஸ்​வ​நாதர் கோயில், கொளத்​தூர் சோம​நாதசு​வாமி கோயில், பெசன்ட்​நகர் மகாலட்​சுமி கோயில், தேனாம்​பேட்டை பாலசுப்​பிரமணிய சுவாமி கோயில், போரூர் ராம​நாதீஸ்​வரர் கோயில் ஆகிய 8 கோயில்​களுக்கு விரை​வில் கும்​பாபிஷேகம் நடத்​தப்​பட​வுள்​ளது.

மேலும், இந்​தாண்டு இறு​திக்​குள் சென்னை மண்​டலங்​களில் 50 கோயில்​களுக்கு திருப்​பணி மேற்​கொண்டு கும்​பாபிஷேகம் நடத்​திடும் வகை​யில் பணி​களை விரைவுப்​படுத்​திட வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார். இதையடுத்​து, கோவை மாவட்​டம், மேட்​டுப்​பாளை​யம், வனபத்​ர​காளி​யம்​மன் கோயி​லில் பணிபுரிந்து பணி​காலத்​தில் உயி​ரிழந்த பணி​யாளரின் வாரிசு​தா​ரர் ர.ர​திவர்​ஷினிக்கு கருணை அடிப்​படையி​லான பணி நியமன ஆணை​யினை அமைச்​சர்​ வழங்​கி​னார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *