தனியாக வந்த செல்வகுமாரை அருண்பாண்டியன், சிறுவன் ஆகியோர் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். அப்போது செல்வகுமாரின் ஆண் உறுப்பையும் அவர்கள் வெட்டினர். இந்தச் சமயத்தில் செல்வகுமாரைத் தேடிக் கொண்டு அவரின் சகோதரி உள்ளிட்ட உறவினர்கள் அங்கு வந்தனர். அதைப்பார்த்ததும் ரீனா, ரக்சிகா, அலெக்ஸ்பாண்டியன், சிறுவன் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த செல்வகுமாரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனையில் அவரின் உறவினர்கள் சேர்த்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பல்லாவரம் காவல் நிலையத்தில் செல்வகுமாரின் சகோதரரி தேன்மொழி புகாரளித்தார். அதில் செல்வகுமாரை ரீனா, ரக்சிகா ஆகியோரின் தூண்டுதலின் பேரில் சிறுவன், அலெக்ஸ்பாண்டியன் ஆகியோர் வெட்டியதாக குறிப்பிட்டார். அதன்பேரில் 4 பேர் மீதும் கொலை முயற்சி உள்பட சில பிரிவுகளின் கீழ் பல்லாவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்தநிலையில் சிகிச்சையிலிருந்த செல்வகுமார், நேற்றிரவு உயிரிழந்தார். அதனால் கொலை வழக்காக மாற்றிய பல்லாவரம் போலீஸார், ரீனா, ரக்சிகா ஆகியோரிடம் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து பல்லாவரம் போலீஸார் கூறுகையில், “இந்த வழக்கில் ரீனா, ரக்சிகா, சிறுவன் ஆகியோரை பிடித்துள்ளோம். இதில் ரீனாவையும் ரக்சிகாவையும் சிறையில் அடைத்துள்ளோம். சிறுவனை சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்துள்ளோம். இந்த வழக்கில் செல்வகுமார், தன்னுடைய முன்னாள் காதலி ரக்சிகாவுக்கும், ரீனாவுக்கும் சொல்ல முடியாதளவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார். அதனால்தான் செல்வகுமாரால் பாதிக்கப்பட்ட ரக்சிகாவும் ரீனாவும் சேர்ந்து இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். விருப்பம் போல இவர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதன்விளைவு, கொலை வழக்கில் சிக்கி கொண்டார்கள். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.