சென்னை | முன்னாள் துறைமுக இணை இயக்குநர் வீட்டில் சிபிஐ சோதனை | CBI raids former port joint director house

1341207.jpg
Spread the love

சென்னை: சென்னை துறைமுகத்தில் கழிவு செய்யப்பட்ட இயந்திர இரும்பு பொருட்களுக்கான டெண்டர் அய்யப்பாக்கத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் சண்முகம் என்பவருக்கு வழங்கப்பட்டது. இது முறைகேடாக வழங்கப்பட்டதாகவும், இதனால், துறைமுகத்துக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், அப்போதைய, துறைமுக இணை இயக்குநராக இருந்த புகழேந்தி மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று துறைமுக முன்னாள் இணை இயக்குநர் வீடு உள்பட 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், டெண்டர் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக சிபிஐ அதிகாரி கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *