இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஆகஸ்ட் 26, செப்டம்பா் 1-ஆகிய தேதிகளில் இரவு 9.05 மணிக்குப் புறப்படும் சென்னை – மேட்டுப்பாளையம் நீலகிரி விரைவு ரயில் (எண்: 12671) சென்னை – கோவை இடையே மட்டும் இயக்கப்படும். கோவை – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை – மேட்டுப்பாளையம் ரயில் பகுதியாக ரத்து!
