சென்னை ரயில்வே கோட்ட புதிய மேலாளராக சைலேந்திர சிங் பொறுப்பேற்பு | Shailendra Singh takes charge as the new manager of Chennai Railway Division

1371202
Spread the love

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக (டி.ஆர்.எம்) சைலேந்திர சிங் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

சென்னை ரயில்வே கோட்டத்தின் மேலாளராக இருந்து விஸ்வநாத் ஈர்யா மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக சைலேந்திர சிங் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சைலேந்திர சிங், சென்னை ரயில்வே கோட்டத்தின் புதிய மேலாளராக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்று கொண்டார். சைலேந்திர சிங், 1995 பேட்ச் இந்திய ரயில்வே சிக்னல் பொறியாளர் ஆவார்.

ரயில்வே நிர்வாகத்திலும், தொழில்நுட்பத்திலும் மிகுந்த அனுபவத்தை கொண்டவரான இவர் இதற்கு முன்பு சிக்கந்திராபாத் கோட்டத்தில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராகவும், ரயில் டெல் நிறுவனத்தில் பொது மேலாளராகவும் பணியாற்றியுள்ளார். அவர் ரயில்வே சிக்னலிங் அமைப்புகளின் சோதனை, செயல்படுத்துதல் மற்றும் திட்டப் பொறியியல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு அளித்துள்ளார். ஜபல்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர், மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர் ஆவார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *