சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ரூ.42 கோடியில் புதுப்பிக்கப்பட்ட ‘தொல்காப்பியப் பூங்​கா’ திறப்பு | Inauguration of the renovated Tholkappia Poonga at Raja Annamalai Puram at Chennai

Spread the love

சென்னை: சென்னை நதி​கள் சீரமைப்பு அறக்​கட்​டளை சார்​பில் ரூ.42.45 கோடி​யில் நவீன வசதி​களு​டன் புதுப்​பிக்​கப்​பட்​டுள்ள தொல்​காப்​பியப் பூங்காவை பொது மக்​கள் பயன்​பாட்​டுக்​காக முதல்வர் நேற்று திறந்துவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை நதி​கள் சீரமைப்பு அறக்​கட்​டளை மூலம் 58 ஏக்​கர் கொண்ட அடை​யாறு உப்​பங்​கழியை சீரமைத்​து, ராஜா அண்​ணா​மலைபுரம் பகு​தி​யில் ‘தொல்​காப்​பியப் பூங்​கா’ உரு​வாக்​கப்​பட்​டது. கடந்த 2011 ஜன. 22-ம் தேதி இந்த பூங்​காவை அப்​போதைய முதல்​வர் கருணாநிதி திறந்து வைத்​தார்.

இந்த பூங்​காவை மேம்​படுத்த கடந்த 2021 ஜூலை​யில் திட்ட அறிக்கை தயாரிக்​கப்​பட்​டு, ரூ.42.45 கோடி​யில் திறந்​தவெளி அரங்​கம், சிற்​றுண்​டியகம் உட்பட பல்​வேறு நவீன வசதி​கள் உரு​வாக்​கப்​பட்​டன. மாநக​ராட்சி மூலம் சாந்​தோம் சாலை​யில் உயர்​மட்ட நடைமேம்​பாலம் (Skywalk) மற்​றும் டாக்​டர் டிஜிஎஸ்.

தினகரன் சாலை​யின் குறுக்கே இருக்​கும் குழாய் கால்​வாய்க்கு மாற்​றாக மூன்​று​வழி பெட்​டகக் கால்​வாய் ஆகியவை அமைக்​கப்​பட்​டுள்​ளன. 3.20 கி.மீ. தூரத்​துக்கு நடைப​யிற்​சிப் பாதை​யும் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

பூங்கா சீரமைப்பு பணி​களை முதல்​வர் ஸ்டா​லின் கடந்த அக்​.1-ம் தேதி பார்​வை​யிட்​டார். பூங்​கா​வில் மாணவர்​களுக்​காக பிரத்​யேக சுற்​றுச்​சூழல் கல்​விச் சுற்​றுலா ஏற்​பாடு செய்​யு​மாறும், பூங்​காவைப் பார்​வை​யிடும் அனைத்து மாணவர்​களுக்​கும் ஊட்​டச்​சத்து மிக்க சிற்​றுண்டி வழங்​கவும் அறி​வுறுத்​தி​னார்.

இந்​நிலை​யில், புதுப்பிக்கப்பட்ட பூங்காவை மக்​கள் பயன்​பாட்​டுக்​காக முதல்வர் நேற்று திறந்துவைத்தார். இந்த நிகழ்​வில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, மா.சுப்​பிரமணி​யன், சேகர்​பாபு உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். பூங்​காவைப் பார்​வை​யிடும் நேரம், முன்​ப​திவு, நுழைவுக் கட்​ட​ணம் உள்​ளிட்ட விவரங்​களை www.crrt.tn.gov.in என்​ற இணை​யதளத்​தில் தெரிந்துகொள்ளலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *