சென்னை: ரௌடி, அவரின் நண்பன் கொடூர கொலை – அதிகாலையில் நடந்த அதிர்ச்சி!

Spread the love

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம், துளசிங்க முதலியார் தெருவில் உள்ள வீட்டில் ரௌடி ஆறுமுகம் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அவரோடு அவரின் நண்பன் சதீஷ் என்பவரும் தங்கியிருந்தார். அதிகாலை நேரத்தில் பைக்கில் வந்த ஒரு கும்பல், தூங்கிக் கொண்டிருந்த ரௌடி ஆறுமுகம், சதீஷ் ஆகியோரை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் ஆறுமுகத்தின் முகம் சிதைந்தது. இருவரின் மரண ஓலம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அதற்குள் கொலை செய்த கும்பலோ அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ஆறுமுகம், சதீஷ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர். இதையடுத்து பல்லாவரம் காவல் நிலையத்துக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரௌடி ஆறுமுகம், சதீஷ் ஆகியோர் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் என போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

இது குறித்து பல்லாவரம் போலீஸார் கூறுகையில், “கொலைசெய்யப்பட்ட ரௌடி ஆறுமுகம், சில மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் சிறையிலிருந்து வெளியில் வந்தார். தன்னுடைய வீட்டில் தங்கியிருந்தால் எதிரிகளால் ஆபத்து என கருதிய ஆறுமுகம், சில மாதங்கள் வடசென்னையில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். அதன்பிறகு முடிச்சூர் பகுதிக்கு குடிபெயர்ந்தார். இவரின் நண்பர்தான் முடிச்சூர் லட்சுமி நகரைச் சேர்ந்த சதீஷ்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *