சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்ததால் பரபரப்பு | There was a Commotion at the Chennai Airport after the Glass Door was Broken

1328462.jpg
Spread the love

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு திடீரென உடைந்து நொறுங்கி ஆபத்தான நிலையில் தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையம் வருகை பகுதியில் 5-ம் எண் கேட் வழியாக, ட்ரான்சிட் பயணிகள், விமான ஊழியர்கள் செல்லக் கூடிய கேட்டில் உள்ள 2 கண்ணாடி கதவுகளில் ஒரு கண்ணாடி கதவு (7 அடி உயரம், 3 அடி அகலம்), திடீரென உடைந்து நொறுங்கி, கீழே சிதறி விழும் ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டு இருந்தது. இதனை பார்த்த பயணிகள் அந்த வழியில் செல்வதற்கு பயந்து, விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த அதிகாரிகள் அந்த கேட் வழியாக யாரும் செல்லாமல் இருக்க, கேட்டை டேப் போட்டு மூடி வைத்தனர். பயணிகள் அனைவரையும் மாற்று வழியில், உள் நாட்டு முனையத்துக்குள் செல்வதற்கு ஏற்பாடு செய்தனர். உடைந்த கண்ணாடி கதவை அகற்றிவிட்டு, வேறு கண்ணாடி கதவு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்ணாடி கதவு எப்படி உடைந்தது என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *