அதே வேளையில், செப்டம்பர் 19 வரையிலும், ரூ.7,945 கோடி அளவில் பங்கு வெளியேற்றத்துடன், அந்நிய முதலீட்டாளர்கள் நிகர விற்பனையாளர்களாக உள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்த பிறகு, அவர்கள் பங்குகளை வாங்குபவர்களாக மாறி ரூ.900 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
இந்தநிலையில், நடப்பு வாரம், ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்புக்கு பிறகு அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.900 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
2025ல் மேலும் இரண்டு முறை ஃபெட் வட்டி விகிதக் குறைப்பு இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உலக சந்தைகளில் பணப்புழக்கம் கணிசமாக மேம்படும். இருப்பினும், செப்டம்பரில் அந்நிய முதலீட்டாளர்கள் நிகர விற்பனையாளர்களாகவே இருந்துள்ளனர்.
இதையும் படிக்க: ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி: பல்வேறு பொருட்களின் விலையை குறைத்த பதஞ்சலி ஃபுட்ஸ்!