செப்டம்பர் மாத ஐசிசி விருது: டிராவிஸ் ஹெட், கமிந்து மெண்டிஸ் பெயர்கள் பரிந்துரை!

Dinamani2f2024 10 082f487399yi2fjl8sy4gzdfitnfkpfzrp.jpg
Spread the love

செப்டம்பர் மாத ஐசிசி விருதுகள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், இலங்கை வீரர்கள் கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜெய சூரியா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா)

டிராவிஸ் ஹெட், செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசி ஆண்களுக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார்.

ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரராக தொடர்ந்து சிறப்பாக விளையாடிவரும் டிராவிஸ் ஹெட் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்துக்கு எதிராக பல அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் புதிய சாதனை படைத்த ஜோ ரூட்!

செப்டம்பர் மாதத்தில் அவர் ஐந்து டி20 போட்டிகளில், 245.94 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 182 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்துக்கு எதிராக 23 பந்துகளில் 59 ரன்களும், ஸ்காட்லாந்திற்கு எதிராக 25 பந்துகளில் 80 ரன்களும் குவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலியா 3-2 என்ற கணக்கில் வென்றது. இந்தத் தொடரில் டிராவிஸ் ஹெட் தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் டிராவிஸ் ஹெட் நான்கு இன்னிங்ஸ்களில் 82.66 சராசரியுடன் 248 ரன்கள் எடுத்தார். மேலும், 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். குறிப்பாக ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்ல உதவினார்.

பீல்டிங்கில் ஈடுபட்ட தெ.ஆ. பேட்டிங் பயிற்சியாளர் ஜேபி. டுமினி!

பிரபாத் ஜெயசூர்யா (இலங்கை)

இலங்கையின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா நியூசிலாந்துக்கு எதிரான தனது அணியின் தொடர் வெற்றியில் பெரும் பங்காற்றினார். இரண்டு டெஸ்ட் வெற்றிகளிலும் தலா 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

காலேயில் நடந்த முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்தார். இரண்டாவது டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்தி இலங்கை அணி தொடரை வெல்ல உதவியாக இருந்தார்.

இங்கிலாந்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் உள்பட மூன்று டெஸ்ட் போட்டிகளில் 27.90 சராசரியில் 21 விக்கெட்டுகளை எடுத்தார்.

மேலும், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 16 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

தன்னம்பிக்கையும் நம்பிக்கையும்..! இலங்கையின் வெற்றி ரகசியம் பகிர்ந்த பயிற்சியாளர் ஜெயசூர்யா!

கமிந்து மெண்டிஸ் (இலங்கை)

செப்டம்பர் மாதத்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கமிந்து மெண்டிஸ், 90.20 என்ற சராசரியில் 451 ரன்களை குவித்தார்.

இலங்கையில் நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்தார். அவர் 75 ஆண்டுகளில் மிக வேகமாக 1000 டெஸ்ட் ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனைக்கு தொந்தக்காரர் ஆனார். அவர் வெறும் 8 டெஸ்டில், 13 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 602/5 டிக்ளேர் செய்தது. இதில் கமிந்து மட்டும் 182* ரன்களை குவித்தார்.

சல்மான் அலி சதம்: 556 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது பாகிஸ்தான்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *