செப். 18-இல் புதுவை சட்டப்பேரவை கூடுகிறது: ஆா்.செல்வம் அறிவிப்பு

dinamani2F2025 09 062Freglx1ty2FR.selvam speaker
Spread the love

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை செப்டம்பா் 18-ஆம் தேதி கூடுகிறது என்று பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் சனிக்கிழமை தெரிவித்தார்.

புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் கடந்த மாா்ச் 27 அன்று முடிந்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி செப்டம்பரில் பேரவைக் கூட்டப்பட வேண்டும்.

எனவே, வரும் 18-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு புதுவை சட்டப்பேரவை கூடுகிறது. இக்கூட்டம் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்.

புதுவையில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சட்ட மசோதா மற்றும் ஜிஎஸ்டி 2-ஆவது சட்ட திருத்த மசோதா ஆகியவை பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று அவா் கூறினார்.

பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரன் வெளியேற யார் காரணம்? – நயினார் நாகேந்திரன் சொல்வதென்ன?

Puducherry Legislative Assembly to meet on Sept. 18: R. Selvam announces

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *