புதிய ஐஃபோன் 17 மாடல் விற்பனைக்கு வந்துவிட்டால், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஐஃபோன் 16 மற்றும் ஐஃபோன் 15 மாடல்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் ரூ.10 ஆயிரம் அளவுக்குக் குறைத்துவிடும்.
கடந்த ஆண்டும், ஆப்பிள் நிறுவனம் இதே வழிமுறையைத்தான் கையாண்டது. இதன் மூலம் பழைய மாடல் ஐஃபோன்களையும் முழுமையாக விற்று முடிக்கவும், ஐஃபோன் வாங்குவது என்று காத்திருப்பவர்களுக்கு விலை குறையும்போது ஜாக்பாட்டாக இருப்பதால் அதிகமானோர் ஐஃபோன்களை வாங்குவதும் ஒரு வணிக உக்தியாக உள்ளது.
இப்போது இன்னும் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், ஐஃபோன் 17 அறிமுகமாகவிருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஐஃபோன் 14 மற்றும் ஐஃபோன் 13 போன்றவற்றின் விலைகள் வரும் காரங்களில் அதிகம் குறையலாம்.
தற்போது ஐஃபோன் 16 மாடல் ரூ.79,900க்கும், ஐஃபோன்16 பிளஸ் மாடல் ரூ.89,900க்கும் விற்கப்படுகிறது. இதுவே, ஐஃபோன் 16 ப்ரோ மற்றும் 16 ப்ரோ மேக்ஸ் இரண்டும் தலா ரூ.1,19,900 மற்றும் ரூ.1,44,900 என்ற அளவில் விற்பனையில் உள்ளது. ஃபோன் 17 அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஐஃபோன் 16இ, ஐஃபோன் 16, ஐஃபோன் 16 பிளஸ் போன்றவை விற்பனையில் தொடரும்.
ஆனால், முற்றிலும் மற்ற போன்கள் விற்பனை நின்றுவிடாது, மூன்றாம் தரப்பு இணையதளங்கள வாயிலாக அதாவது ஃபிளிப்கார்ட், அமேசான் போன்றவற்றில் செல்ஃபோன் இருப்பு இருக்கும் வரை விற்பனை நடைபெறும். அதேவேளையில், சில வங்கிகளின் கிரெடிட் கார்டு, போன்றவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் விலைச் சலுகைகளுடன் ஐஃபோன்கள் விற்கப்படும்.