“செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தை முன்னெடுப்போம்” – முதல்வர் ஸ்டாலின்  | Let’s drive the future through artificial intelligence technology – CM Stalin

1307736.jpg
Spread the love

சென்னை: “செயற்கை நுண்ணறிவு ஆற்றலைப் பயன்படுத்தி தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தை முன்னெடுப்போம்” என்றும், “அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் #e_office வழியே பணி தொடர்கிறது…” என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “செயற்கை நுண்ணறிவு முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வது குறித்து BNY MELLON உடன் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. செயற்கை நுண்ணறிவு ஆற்றலைப் பயன்படுத்தி தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தை முன்னெடுப்போம்,” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலின், “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் #e_office வழியே பணி தொடர்கிறது…” என்று பதிவிட்டிருந்தார்.

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் போது, சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகில் 10 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் மொத்தம் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செப்.5 அன்று சிகாகோவில் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *