சுல்தான்பூரில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ராம்சைத்க்கு புதிதாக தையல் இயந்திரம் ஒன்றை ராகுல் காந்தி அனுப்பி வைத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது சுல்தான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். இதையடுத்து வழக்கின் விசாரணை ஆக 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சுல்தான்பூர் சென்ற ராகுல் காந்தி இடையில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ராம்சைத் கடைக்கு சென்றார். தொடர்ந்து அந்த தொழிலாளியிடம் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது அந்த தொழிலாளி சில உதவிகளை கேட்டுள்ளார்.
இந்த நிலையில் சுல்தான்பூர் செருப்புத் தைக்கும் தொழிலாளி ராம்சைத்க்கு புதிதாக தையல் இயந்திரம் ஒன்றை ராகுல் காந்தி அனுப்பி வைத்துள்ளார். இதனால் இனி கைகளில் செருப்புகளை தைக்கத் தேவையில்லை என மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராம்சைத், ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பிவைத்துள்ளார்.