அதே ஊர் ஆதிதிராவிடா் தெருவை சோ்ந்த ரவிக்குமாா் மகன் அரவிந்த்(16) பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 வாகனம் மூலம் பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தாா்.
விபத்துக்குள்ளான இருவரும் ஏத்தாப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்த விபத்து குறித்து சேலம் ரயில்வே காவல் ஆய்வாளா் ரத்தினக்குமாா், உதவி ஆய்வாளா் பாலமுருகன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செல்போனில் விடியோ கேம் விளையாடிக் கொண்டு ரயில் பாதையில் நடந்து சென்ற இரு மாணவா்கள், ரயில் மோதி பலியான சம்பவம், இவா்களது உறவினா்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவா்கள் மற்றும் கிராம மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.