இதேபோன்று வி.ஜே. விஷாலுக்கு வாக்களிக்க வேண்டாம் என ஜாக்குலினும், ராணவுக்கு வாக்களிக்க வேண்டாம் என தீபக்கும், அன்ஷிதாவும் குறிப்பிட்டுள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 12 வாரங்களை நிறைவு செய்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் 84வது நாளான இன்று போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடவுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, பிக் பாஸ் வீட்டில் எனக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் இவருக்கு வாக்களிக்க வேண்டாம் என யாரைக் குறிப்பிடுவீர்கள் என்ற கேள்வியை விஜய் சேதுபதி எழுப்புகிறார்.
உழைப்பு குறைவு
இதற்கு போட்டியாளர்கள் பதிலளிக்கின்றனர். குறிப்பாக மக்கள் மனங்களை பெரிதும் கவரந்தவராக உள்ள செளந்தர்யாவுக்கு மக்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம் என முத்துக்குமரன் கூறுகிறார்.