ஒரே போட்டியில் இரு தங்கம்: சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஆடவர், மகளிர் அணிகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
ஹங்கேரியில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி இரண்டுமே தங்கம் வென்று அசத்தின. செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்றில் இந்திய அணிகள் தங்கம் வென்றுள்ளது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன், இந்திய ஆடவா் அணி இரு முறையும் (2014, 2022), மகளிா் அணி ஒரு முறையும் (2022) வெண்கலம் பதக்கம் வென்றுள்ளன.
இந்நிலையில், புதுதில்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வருகை தந்த செஸ் வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். மேலும், இளம் வீரர் பிரக்ஞானந்தா மற்றும் அர்ஜூன் எரிகாய்சி இருவரும் செஸ் விளையாட அதை உற்சாகமாக கண்டுகளித்தார்.