சேயோன்: ‘அன்று கல்லூரி சீனியர், இன்று இசையமைப்பாளர்’; எஸ்.கே – சனா 24 வருட நட்பு பற்றி தெரியுமா? |Seyon: ‘College senior then, music composer today’; Do you know about SK – Sana’s 24-year friendship?

Spread the love

சந்தோஷ் நாராயணன் மட்டுமல்ல, அக்கல்லூரி கல்சுரல்ஸ் நிகழ்வுகளில் தூள் கிளப்பிய பலரும் இன்று சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். சிவகார்த்திகேயனும் சில நேர்காணல்களில் அவர்களுடைய கல்லூரி நாட்களில் அவர் செய்த மிமிக்ரி நிகழ்வுகள் குறித்துப் பேசியிருப்பார்.

சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ் ஆகியோர் மிமிக்ரி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த, சந்தோஷ் நாராயணன், திபு நினன் தாமஸ், முத்தமிழ் எனப் பலரும் மியூசிக்கில் பெர்ஃபார்ம் செய்திருக்கிறார்கள்.

கல்லூரியில், சந்தோஷ் நாராயணனுக்கு அடுத்தடுத்த பேட்ச்களில் படித்தவர்கள்தான் சிவகார்த்திகேயன், திபு நினன் தாமஸ், அருண்ராஜா காமராஜ்.

கல்லூரி கல்சுரல்ஸ் நிகழ்வுகளைத் தாண்டி சினிமாவுக்கு வந்த பிறகு சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ், சந்தோஷ் நாராயணன், முத்தமிழ் என நால்வரும் இணைந்து சுயாதீன ஆல்பம் ஒன்றைத் தயார் செய்திருக்கிறார்கள்.

‘இதம்’ எனப் பெயரிடப்பட்ட அந்தச் சுயாதீன ஆல்பம் வெளியிடப்படவில்லை. முத்தமிழ், அருண்ராஜா காமராஜ் பாடல் எழுத, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, அதில் சிவகார்த்திகேயன் பெர்ஃபார்ம் செய்ய என அப்பாடலை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், அப்பாடல் அதன் பிறகு வெளியிடப்படவில்லை.

இன்று சந்தோஷ் நாராயணன் – சிவகார்த்திகேயன் கூட்டணி ‘சேயோன்’ படத்திற்காக ஒன்றிணைந்திருக்கிறது!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *