சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி பாதயாத்திரை குழு சார்பில் 11-வது ஆண்டாக பழனிக்கு செவ்வாய்க்கிழமை பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
அரசிராமணி செட்டிப்பட்டி பகுதியிலிருந்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் ஒவ்வொரு வருடமும் பழனிக்கு பாதயாத்திரை சென்று வருவர்.
அதனையடுத்து நிகழாண்டு 11வது ஆண்டாக ஜனவரி 1 ஆம் தேதி அரசிராமணி செட்டிப்பட்டியில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் பழனி முருகனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து வருகின்றனர்.
அதனையடுத்து தை முதல் நாளான ஜன.14 ஆம் தேதி பழனிக்கு பாதயாத்திரையாக செல்பவர்கள் செட்டிப்பட்டியில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து விபூதி, எலுமிச்சம் பழம், வில்வ இலை, தேங்காய்கள் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு இருமுடி கட்டினர்.