சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்த பாரதி. இவரது தந்தை டெல்லி ஆறுமுகம், அதிமுகவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்.
பி.இ பட்டதாரியான பாரதி, சங்கர்நகர் பகுதியில் டியூஷன் எடுக்கும் இடத்திலேயே தங்கிக் கொள்வார். இவரது நண்பர் நாலுகால்பட்டி பகுதியை சேர்ந்த உதயசரண், இவர் தனியார் மருத்துவமனையில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 7ம் தேதி நைட் ஷோ சினிமாவிற்கு பாரதியும் உதயசரணும் சென்றிருந்தனர். பின்னர் பாரதி தங்கி இருந்த அறையில் உதயசரண் வந்து தங்கி உள்ளார்.
அப்போது பாரதி மயங்கி நிலையில், உதயசரண் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்து, ஒரு மணி நேரத்திற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாரதியின் உறவினர்கள் தனியார் மருத்துவமனை முன் திரண்டனர். அப்போது அவர்கள் பாரதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.